2012 - LatestpoemS.com
Headlines News :

அம்மா

Written By KAJANTHAN JS on Thursday 12 January 2012 | 07:23

அன்பென்ற சொல்லுக்கு அர்த்தம் தேடுபவர்களே 
அறிந்தது கொள்வீர் அன்பென்றால் அம்மா தானே.......... 
இரைந்து மாதங்கள் இடுப்புவலி பொறுத்து 
இவ்வுலகை பரிசளித்தாள் இனியவாழ்வை எமக்களித்தாள்........ 
அருகிருக்கையில் அலட்சியம் அம்மா உன்சொல்களுக்கு 
தொலைவில் இருக்கையில் சொல்வதற்கு 
யாருமின்றி துவளுதே என்மனமதுவே.......... 
சோகமதில் துவண்டால் தாய்மடியே சொர்க்கம் 
என்வேதனைகள் போக்க உன் ஒரு துளி புன்னகையே மருந்து .... 
நான் படும் துன்பங்கள் அனைத்தும் 
தாயே உன் நினைவால் தவிடு பொடியாகிவிடும் 
தாவிடும் மனது அடுத்த செயலுக்கு ...... 
உன் மனம் நோகவிட்டபோதும் 
என் மனம் நோகவிட்டதில்லையே 
தாய் அன்பால் இந்த தரணியை விலைபேசிடலாம் .........

வறுமை

பெண் தோழி இல்லை - வறுமை அல்ல!! 
பொருள் கோடி இல்லாமல் இருப்பது - வறுமை அல்ல!!! 
உயர் கல்வி இல்லாமல் இருப்பதும்- வறுமை அல்ல!! 
தேடா அறிவு நிலைபெற்றிருந்தால் அது வறுமை !! 
சுய நம்பிக்கை இல்லை - ஐயோ வறுமை !!!

குருவிக் கதை

விழுதுகள் பல கொண்டு 
வளர்ந்து நின்றது ஆலமரம் 
தவழ்ந்து வந்த தென்றல்க் காற்று 
கிளைகளை அசைத்து இலைகளை வருடிற்று 
குருவி ஒன்று சுள்ளி பொறுக்கி 
குஞ்சுக்காய் கூடொன்று கட்டியது 
முட்டை இரண்டு போட்டு வைத்தது 
காலம் கனிய குஞ்சுகள் பொரித்தன 
தாயின் களைப்பு களிப்பானது 
பட்ட துன்பம் பறந்தோடிற்று 
இரைய்கேடி குஞ்சுக்கு ஊட்டி 
கொஞ்சிக்குலாவி குதூகலித்தது 
வயிற்றுப் பசி மிகக் கொண்டு 
பாம்பொன்று அலைந்து திரிந்தது 
வேலியில் இருந்த கிழட்டு ஓணான் 
தலையை ஆட்டிக் காட்டிக் கொடுத்தது 
தாய்க் குருவி பதறித்துடித்தது கத்திக்கதறியது, 
சிறகடித்துப் போராடிற்று 
குஞ்சுகள் கொஞ்சம் கெஞ்சிப்பார்த்தன 
அலகுகள் கொண்டு கொத்திப்பார்த்தன 
பாம்பு வயிற்றை நிரப்பிக் கொண்டது 
கொடுமையென்றன பறவைக் கூட்டம் 
பாவமென்றன விலங்குக் கூட்டம் 
இயற்கையென்றது வெளி நாட்டுக் கழுதை 
பழகிப்போச்சென்றது அசையா ஆலமரம் 
சரிதானென்றது தலையாட்டி ஓணான் 
தாய்க்குருவி மட்டும் சுள்ளி பொறுக்கியது

கானல் பூக்கள்

ஒட்டிய வயிறும் கந்தல் உடையும் 
தெருநடை ஓரத்தில் பிச்சை தட்டுடன் நான் 
கானல் வீதியில் சருகாகும் பூக்களில் 
என்னைபோல் ஏராளம் சிறார்கள் இங்கே 
இனப் படுகொலை அரசின் மயானத்தில் 
என் குடும்பத்தில் எஞ்சிய எச்சம் நான் 
எச்சில் சோறேனும் தருவாரா 
என சுற்றத்தை பார்க்கிறேன் 
விழியில் வீழ்ந்து வளியும் வேர்வைத் துளி 
எரிவை தந்து காய்கிறது 
என் தாகத்தை தணிக்கவில்லை 
எனக்காகத்தான் கனிந்ததோ தெரியவில்லை 
தெருவோர கால்வாய்க்குள் 
ஒரு தோடம்பழம் நிறம் மாறினாலும் 
முக்குளித் தெழுந்து என் முகத்தை பார்க்கிறது 
விடுவேனா அதை துடைத்தெடுத்து 
சுளை உரித்துண்டு களைப்பை போக்கிக்கொள்கிறேன் 
எங்கிருந்தோ வந்த ஓர் நல்லிதயம் 
ஓத்தை ரூபாயை என் தட்டில் இட்டுச் செல்கிறது 
தேனீருக்கும் அது போதாத காசு 
யாம் இருக்க பயம் ஏன் ! 
விளம்பர பலகையோடு என் எதிரே ஓர் தேனீர் கடை 
அதன் கண்ணாடி பெட்டிக்குள் சீனிபணிஸ் 
கண்ணுக் கெட்டியது வாய்க்கெட்டுமா காத்திருக்கிறேன் 
இன்னு ஒரு ஒத்தை ரூபாவிற்காக.

இது கணிப்பொறி கற்றுத்தந்த பாடமா !!


கரையில் எழுதிய கவிதை வரிகளை
கடல் கரைத்துச் சென்றதுபோல்
இதயத்தில் இருந்த நம்பிக்கையை
யாராரோ கரைத்து சென்றுவிட்டார்கள்!
கண்கள் எட்டும் தூரம் மட்டும்
கவலைக் கோடுகள்
நிதர்சனம் புரியாமல்
புலம்புகிறேன் நித்தமும்!!
பெரிய தோல்வி உறவுகளின் இழப்பு..
தடம் மாறிப் போன காதல்..
என எதுவந்தாலும்
மறக்கமுடியா நினைவுகளாய்
உண்மையின் அதிர்வுகளாய்

இயல்பாய்
இருக்க முடிகிறது
என்னால்..
இது கணிப்பொறி கற்றுத்தந்த பாடமா !!

சிறகொடிந்த பறவைகள்


சின்னஞ்சிறுசுகளாய்
சிதறித்திரிந்த சிட்டுகளாய்
கவலைகளறிந்திராத
வேளைகளோடு பயணித்தோம்
தந்தை உழைத்திருக்க
தாயும் அரவணைக்க
சகோதரப் பாசங்களுடன்
சந்தோசமே காலங்கள்
பள்ளித்தோழரென்றும்
பண்பான உறவுகளென்றும்
பாசங்கலந்திருந்த பாதைச் சரசங்கள்...
பங்கம் விளைந்ததென்று
சொந்தம் காத்திட
சுவர்க்கம் இருக்கிறதென்று
சுகமறுந்த தேடலின்று
நாடு துறந்திருந்து தேசம்
கடந்த சேதங்களாய்
நாளும்பொழுதும் தவிப்பே தாரமாகிறது...
தனிமை துணையென்று
காண்பவை தயவென்று
உண்பது உயிர்வாழ
உழைப்பே குறியாகிறது
சகிப்பை வேதமாக்கி
எதிர்ப்புகளின் உச்சத்தில்
எல்லையில்லா இன்னல்களுடன்
ஏக்கங்களின் ஆழுமையிங்கு
வாழமுடியாத வாழ்கையொன்றை
வாழத்துடிக்கின்ற உயிர்களாய்
இறைக்கையுடைந்து உலவுகின்ற
பறவைகளாய் நாங்களும் இங்கு..

நிழல்

நிழல் பகலில் தோன்றும்,
இரவிலும் பின்தொடரும்.
ஆனால் இரவில்
நிழல் கண்களுக்கு புலப்படுவதில்லை!!
இரவில்,  நிழல் உண்மையா பொய்யா!!
உண்மையும் பொய்மையும்
இயற்கையின் பரிமாணங்கள்!!
இவை
முரண்பட்டது போலிருந்தாலும்
உண்மையான கூற்று.
ஏற்றுக்கொள்ளப்பட்ட இயல்புக்கு
மாறான செய்தியாக இருந்தாலும்,
அனைத்து எண்ணங்களும்
இதனில் சரண்புகும்.
இதயத்தினால் நம்பிக்கை வை,
இவற்றில் எது உண்மை
என்று புலப்படும்!!

தொலைத்தவைகள்


என் வாசிப்பு வழக்கம்-
இந்த கணணி வலைபின்னலில்
சிக்குண்டு போனது
என் கடிதச்சந்தோசங்கள்
ஈமெயில் வரவில்
விலாசம் துறந்தது
கண்டுகளித்த நண்பர்கள் வட்டம்
"பேஷ்புக்கிலும் வேப்கோம்மிலும்"
வெறுமையானது
வண்ணத்திரை தந்த பட பிரமிப்பு
"தொலைக்காட்சியிலும் மொனிட்டரிலும்"
தொலைந்தே போனது
இன்னும் எத்தனை எத்தனை
தொலைத்தவைகள் இங்கே -இன்று
மறந்தே போனது

எமை மீட்பீரோ?


பாவங்கள் சிலுவையில் சுமந்தவரே இந்தப்
பாவிகள் பூமியிலே
தேகங்கள் ரத்தமும் சிந்துகிறோம் - எங்கள்
தேவைகள் அறியீரோ
மேகங்கள் மூடிய புல்வெளியில் -பெரு
மின்னலும் இடியினிலே
சோகங்கள் கொண்டுமே மேய்ந்துநின்றோம்  நாம்
சென்றிடும் வழி அறியோம்
வெட்டுது மின்னலும் வேகமுடன் வந்து
வீசுது புயலெழுந்து
கொட்டுது மழையும் கூடிவந்து இருள்
குவிந்தது கண்மறைத்து
வட்டமெனப் பெருவெளியினிலே  -நாம்
 வந்தது ஏனறியோம்
தொட்ட இடங்களில் புற்களில்லை வெறும்
முட்களே குத்தநின்றோம்
தேகம் இளைத்திட நாம்நடந்தோம் எந்த
திசையென நாமறியோம்
போக நினைத்தஇப் பூமியிலே - செல்லும்
பாதையும் நாமிழந்தோம்
வேகு மனத்துடன் துடித்து நின்றோம் -பல
 விலங்குகள் சுற்றி எமை
நோகக் கடித்திடக் கதறுகிறோம் அருள்
நேசனே  மீட்பீரோ
புல்வெளி இரத்த மென்றாகிடவே இந்த
பூமியும் சிவந்ததையா
நல்மனம் கொண்டவர் நாம் அழிந்தோம்-
நல்லுயிர்களும் இழந்தழுதோம்
சொல்வது அறியோம் பலதடவை -நாம்
சிலுவைகள் சுமந்துவிட்டோம்
வல்லவரே என்றும் நல்லவரே- இனி
வந்தெமை மீட்பீரோ
கல்லிலும் முள்ளிலும் நடந்துவிட்டோம் -இரு
கால்களும் நோகுதையா
பல்லுயிர் இழந்துமே பரிதவித்தோம் -இனி
பட்டது போதுமையா
நல்லவரே எமைக் காத்திடுவீர் -நடு
வழியினில் கதியிழந்தோம்
செல்ல இப்பூமியில் திக்கறியோம்- ஒரு
தேசமும் தாருமய்யா !

தாயன்பு!


நீராட்டி சீராட்டி
  நிலாக்காட்டி சோறூட்டி
தோள்மேலே தொட்டில் கட்டி
  தாலாட்டு தான்பாடி
தன்மடியில் தூங்க வைத்து
  கண்ணை இமை காப்பதுபோல்
தன் பொன்னைக் காத்து வரும்
  தாயன்பிற்கு ஈடேது தரணியிலே?
கொஞ்சிக் குலாவிப் பின்
  பிஞ்சின் காலை கண்ணிலொற்றி
கொஞ்சுமொழி தான்பேசி
  பிஞ்சின்மொழி தான் கேட்டு - அதை
ஊர்முழுதும் சொல்லிவரும்
  தாயன்பிற்கு நிகருண்டா தரணியிலே?
நெஞ்சோடு தன் பிஞ்சை
  நெருக்கமாய் அணைத்துத் தன்
குஞ்சைக் காக்கும் கோழி போல
  பாசத்தோடு காத்துவரும்
தாயன்பிற்கு நிகருண்டா தரணியிலே?
ஆளான பின்னாளும்
  அவன் தனக்கு குழந்தையென
அறுசுவையும் செய்துவைத்து
  அன்போடு ஊட்டிவிடும்
அன்னைக்கு நிகருண்டா தரணியிலே?
கண்கண்ட தெய்வமவள்
  காத்திடணும் கடைசிவரை
மன்வந்த தெய்வமல்லோ
  மறக்கலாகா இறுதிவரை!!!
Seralathan. Powered by Blogger.

Followers

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. LatestpoemS.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger