குருவிக் கதை - LatestpoemS.com
Headlines News :
Home » » குருவிக் கதை

குருவிக் கதை

Written By KAJANTHAN JS on Thursday, 12 January 2012 | 07:22

விழுதுகள் பல கொண்டு 
வளர்ந்து நின்றது ஆலமரம் 
தவழ்ந்து வந்த தென்றல்க் காற்று 
கிளைகளை அசைத்து இலைகளை வருடிற்று 
குருவி ஒன்று சுள்ளி பொறுக்கி 
குஞ்சுக்காய் கூடொன்று கட்டியது 
முட்டை இரண்டு போட்டு வைத்தது 
காலம் கனிய குஞ்சுகள் பொரித்தன 
தாயின் களைப்பு களிப்பானது 
பட்ட துன்பம் பறந்தோடிற்று 
இரைய்கேடி குஞ்சுக்கு ஊட்டி 
கொஞ்சிக்குலாவி குதூகலித்தது 
வயிற்றுப் பசி மிகக் கொண்டு 
பாம்பொன்று அலைந்து திரிந்தது 
வேலியில் இருந்த கிழட்டு ஓணான் 
தலையை ஆட்டிக் காட்டிக் கொடுத்தது 
தாய்க் குருவி பதறித்துடித்தது கத்திக்கதறியது, 
சிறகடித்துப் போராடிற்று 
குஞ்சுகள் கொஞ்சம் கெஞ்சிப்பார்த்தன 
அலகுகள் கொண்டு கொத்திப்பார்த்தன 
பாம்பு வயிற்றை நிரப்பிக் கொண்டது 
கொடுமையென்றன பறவைக் கூட்டம் 
பாவமென்றன விலங்குக் கூட்டம் 
இயற்கையென்றது வெளி நாட்டுக் கழுதை 
பழகிப்போச்சென்றது அசையா ஆலமரம் 
சரிதானென்றது தலையாட்டி ஓணான் 
தாய்க்குருவி மட்டும் சுள்ளி பொறுக்கியது
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. LatestpoemS.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger